அருணாச்சல பிரதேசத்தில் பா.ஜனதாவைச் சேர்ந்த 10 பேர் போட்டியின்றி எம்.எல்.ஏ.-க்களாக தேர்வு
- அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 60 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.
- மக்களவை தேர்தலுடன் வருகிற 19-ந்தேதி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இரண்டு மக்களவை தொகுதிகளுக்கு முதல் கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
அத்துடன் 60 தொகுதிகளை கொண்ட சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கியது, 27-ந்தேதியுடன் மனுதாக்கல் முடிவடைந்தது. 28-ந்தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்றது. இன்றுடன் வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடைந்தது.
#WATCH | Arunachal Pradesh: Newly elected MLA from Itanagar, Techi Kaso receives a grand welcome from supporters and BJP workers. pic.twitter.com/0IibZecWVC
— ANI (@ANI) March 30, 2024
இதனைத் தொடர்ந்து இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி பா.ஜனதா முதல்வர் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்ட 10 பேர் போட்டியிடும் தொகுதியில் எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதனால் 10 பேரும் ஒருமனதாக எம்.எல்.ஏ.-க்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
என்றபோதிலும் ஜூன் 4-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார்கள். இட்டாநகர் மற்றும் டெச்சி கசோ தொகுதியில் எம்.எல்.ஏ.-வாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பிராமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
முக்டோ, சவுக்காம், சகாலீ, தலி, தலிஹா, ரோய்ங், ஜிரோ-ஹபோலி, இட்டாநகர், மொம்திலா, ஹயுலியாங் ஆகிய தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் பா.ஜனதா வேட்பாளர்கள் ஒருமனதாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதில் பீமா கண்டு, சவ்னா மெய்ன் ஆகியோர் முறையே முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆவார்கள்.