இந்தியா

கோப்புப்படம் 

ஜாமின் தடை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு

Published On 2024-06-24 04:01 GMT   |   Update On 2024-06-24 04:01 GMT
  • சிறையில் இருந்து வெளியில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
  • இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை.

டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் விசாரணை நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. இதைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவருக்கு ஜாமின் வழங்கியதற்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமின் உத்தரவை, அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை விசாரிக்கும் வரை நிறுத்தி வைப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

ஜாமின் நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையிலேயே உள்ளார். இந்த நிலையில், தனக்கு வழங்கப்பட்ட ஜாமின் உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

Tags:    

Similar News