இந்தியா (National)

ஜோசியர்களுடன் இலவச சாட்.. 7ம் ஆண்டை கொண்டாட ரூ.50 கோடி செலவு செய்த Astrotalk

Published On 2024-10-19 10:51 GMT   |   Update On 2024-10-19 10:51 GMT
  • கிட்டத்தட்ட 4 கோடி மக்கள் Astrotalk செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
  • Astrotalk செயலியில் 15,000-க்கும் மேற்பட்ட ஜோசியர்கள் உள்ளனர்.

அஸ்ட்ரோடாக் இந்தியாவின் புகழ் பெற்ற இணையவழி ஜோதிட வலைத்தளமாக உள்ளது. இதில் புகழ்பெற்ற பல ஜோசியர்களுடன் மக்கள் தங்களது பிரச்சனைகளை கூறி தீர்வுகளை பெறலாம்.

ஒவ்வொரு ஜோசியருக்கும் ஏற்றவாறு அந்த வலைத்தளத்தில் கட்டணம் வசூலிக்கப்படும். இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் இந்த வலைத்தளத்தில் 15,000-க்கும் மேற்பட்ட ஜோசியர்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 4 கோடி மக்கள் இந்த வலைத்தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

அஸ்ட்ரோடாக் வலைத்தளம் 2017 ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த வலைத்தளத்தின் 7 ஆம் ஆண்டு பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நேற்று (அக்டோபர் 18) ஜோசியர்களுடன் இலவசமாக மக்கள் சாட் செய்யலாம் என்று அதன் சி.இ.ஓ புனித் குப்தா அறிவித்தார். இந்த அறிவிப்பிற்காக கிட்டத்தட்ட ரூ.50 கோடி பணத்தை அந்நிறுவனம் செலவு செய்துள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து கிட்டத்தட்ட 1 கோடி பயனர்கள் நேற்று இலவசமாக ஜோசியர்களிடம் சாட் செய்து பல கேள்விகளை எழுப்பினர். அதில், எப்போது தனக்கு திருமணம் நடக்கும். என்னுடைய முன்னாள் காதலி எப்போது என்னிடம் திரும்பி வருவாள் போன்ற கேள்விகளை பலரும் ஜோசியர்களிடம் கேட்டுள்ளனர்.

Tags:    

Similar News