இந்தியா

கேரளாவில் சுற்றுலாத்துறையை முடக்க முயற்சி: முன்னாள் மந்திரி குற்றச்சாட்டு

Published On 2024-06-25 05:02 GMT   |   Update On 2024-06-25 05:02 GMT
  • சுற்றுலாத் துறையை முடக்க முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
  • கடகம்பள்ளி சுரேந்திரன் சட்டசபையில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்திற்கு சுற்றுலாத்துறை மூலம் அதிக அளவு வருமானம் வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் தினமும் கேரளாவுக்கு வந்து சுற்றுலா தலங்களை பார்த்துச் செல்கின்றனர்.

இந்தநிலையில் சுற்றுலாத் துறையை முடக்க முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை முன்னாள் சுற்றுலாத்துறை மந்திரியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான கடகம்பள்ளி சுரேந்திரன் சட்டசபையில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

முதல்-மந்திரி பினராய் விஜயனின் அறிவுறுத்தலை கூட சுற்றுலாத்துறை அதிகாரிகள் புறக்கணிப்பதாக கூறிய அவர், காயல் புனரமைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாகவும், அதனை தனியாரிடம் ஒப்படைத்து திட்டத்தை முடக்க முயற்சிகள் நடப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காத சுற்றுலாத்துறை மந்திரி முகமது ரியாஸ், துறை சார்ந்த அறிக்கையின் படி திட்டம் செயல்படுத்தப்படும் என்று மட்டும் கூறினார்.

Tags:    

Similar News