இந்தியா

ராமர் கோவிலில் இன்று காலை கட்டுக்கடங்காத வகையில் குவிந்த பக்தர்கள்?

Published On 2024-01-23 01:13 GMT   |   Update On 2024-01-23 01:50 GMT
  • ராமர் கோவில் கும்பாபிஷேகம் நேற்ற விமர்சையாக நடைபெற்று முடிந்தது.
  • முதல் காலை நேரமான இன்று ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடினர்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோவில் கும்பாபிஷேகம் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. ராமர் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆத்தியநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் பிராண பிரதிஷ்டை பூஜையில் கலந்து கொண்டனர். மேலும், நாட்டில் உள்ள முன்னணி தொழில்அதிபர்கள், பிரபலங்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர்.

ராமர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய பக்தர்கள் விரும்பினர். ஏற்கனவே கும்பாபிஷேக விழாவைக் காண அயோத்தியில் ஆயிரக்கணக்காக பக்தர்கள் குவிந்திருந்தனர்.

கும்பாபிஷேகம் முடிந்து முதல் காலை நேரமான இன்று, அதிகாலையில் இருந்து கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்கதர்கள் வரத் தொடங்கினர். அவர்கள் கோவில் வளாகத்தில் கூடியதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டு சாமி தரிசனம் செய்ய உள்ளே முண்டியடித்து நுழையத் தொடங்கினர். பாதுகாவலர்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் தள்ளுமுள்ளு ஏற்பது போன்ற ஒரு அசாதாரண சூழ்நிலை காணப்பட்டது போன்ற வீடியோ வெளியானது. 

ஆனால், அது ராமர் கோவிலில் பக்தர்கள் கூடிய வீடியோ அல்ல. கவுகாத்தியில் உள்ள கோவிலில் பக்தர்கள் கூடிய கூட்டம். ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கவுகாத்தியில் உள்ள கோவிலில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதனையொட்டி பக்தர்கள் சாமிதரிசனம் செய்ய முண்டியத்து சென்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News