சுரங்க பாதையில் சொகுசு கார் மூழ்கி வங்கி மேலாளர, கேஷியர் உயிரிழந்த சோகம்
- இரண்டு பேரும் காரில் இருந்து இறங்கி நீந்தி பாதுகாப்பாக செல்ல முயன்றனர். ஆனால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
- கார் வெள்ளத்தில் சிக்கியிருப்பது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பல மணி நேரம் போராட்டத்திற்கு இருவரின் உடல்களையும் கண்டெடுத்தனர்.
டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
மாநிலங்களில் பெய்த பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை காரணமாக சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
இந்த நிலையில், ஃபரிதாபாத்தில் வெள்ளம் சூழ்ந்த பாதாள சாக்கடையில் எஸ்யூவி கார் தண்ணீரில் மூழ்கியதில் வங்கி மேலாளர் மற்றும் காசாளர் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
குருகிராமில் உள்ள செக்டார் 31ல் உள்ள தனியார் வங்கி கிளையின் மேலாளராக இருந்த புண்யஸ்ரேயா ஷர்மாவும், அங்கு காசாளராக இருந்த விராஜ் திவேதியும் பணி முடிந்து நேற்று மாலை மஹிந்திரா எக்ஸ்யூவி700 காரில் ஃபரிதாபாத்துக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பழைய ஃபரிதாபாத் ரெயில்வே சுரங்கப்பாதையை அடைந்த போது, அப்பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்திருப்பதைக் கண்டனர். ஆனால் தண்ணீர் எவ்வளவு உயரத்திற்கு இருக்கும் என்பதை அறிய முடியவில்லை.
இதனால், சுதாரிப்பதற்குள் கார் வெள்ளத்தில் மூழ்கத் தொடங்கியது. இதனால் இரண்டு பேரும் காரில் இருந்து இறங்கி நீந்தி பாதுகாப்பாக செல்ல முயன்றனர். ஆனால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
கார் வெள்ளத்தில் சிக்கியிருப்பது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பல மணி நேரம் போராட்டத்திற்கு இருவரின் உடல்களையும் கண்டெடுத்தனர்.