இந்தியா

பெங்களூரு குண்டுவெடிப்பு: ஒருவர் கைது

Published On 2024-03-13 07:18 GMT   |   Update On 2024-03-13 07:55 GMT
  • பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.
  • சபீரை பெல்லாரியில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

பெங்களூரு:

பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ந்தேதி நடைபெற்ற குண்டுவெடிப்பு குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. மேலும், தகவல் கொடுப்பவர்களின் விவரங்கள் பாதுகாப்பாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில், சபீர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சபீரை பெல்லாரியில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

கைதான சபீர் முக்கிய குற்றவாளி இல்லை என்றும், வெடிகுண்டு வைத்தவருக்கு உதவியவர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. சபீர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்ததாக தெரியவந்துள்ளது.

Tags:    

Similar News