இந்தியா

எடியூரப்பாவுக்கு எதிராக ஜாமினில் வர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்தது பெங்களூரு நீதிமன்றம்

Published On 2024-06-13 11:50 GMT   |   Update On 2024-06-13 12:10 GMT
  • 17 வயது சிறுமிக்கு பாலியல தொந்தரவு கொடுத்ததாக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • சிஐடி போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில், நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தனர்.

17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவரது தாயார், எடியூரப்பா மீது புகார் அளித்தார். இதனடிப்படையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கான இது தொடர்பான வழக்கை கர்நாடக மாநில டிஜபி, சிஐடி-க்கு மாற்றினார்.

சிஐடி அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி எடியூரப்பாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் எடியூரப்பா சிஐடி முன் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் பெங்களூரு நீதிமன்றம் எடியூரப்பாவிற்கு எதிராக ஜாமினில் வரமுடியாத கைது வாரன்ட்-ஐ பிறப்பித்துள்ளது. இதனால் சிஐடி போலீசாரால் எடியூரப்பா கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எடியூரப்பா பாஜக கட்சியின் பாராளுமன்ற குழு உறுப்பினராக உள்ளார். தற்போது அவர் டெல்லியில் உள்ளார். கர்நாடகா திரும்பிய பிறகு சிஐடி விசாரணைக்கு செல்வார் என, அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்ததன. இந்த நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

81 வயதான எடியூரப்பா பெண்ணின் குற்றச்சாட்டை முழுமையாக மறுத்த நிலையில், சட்டப்பூர்வமாக இந்த வழக்கை எதிர்கொள்வேன் எனத் தெரிவித்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் சிஐடி அதிகாரிகள் எடியூரப்பாவின் குரல் மாதிரியை சேகரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கர்நாடக மாநில உள்துறை மந்திரி ஜி. பரமேஷ்வரா "ஜி. பரமேஷ்வரா கூறியதாவது:-

நடைமுறைப்படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை ஜூன் 15-ந்தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். சிஐடி போலீசார் அதற்கு முன்னதாகவே குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து விடுவார்கள். அதன்பின் அவர்கள் நடைமுறையை பின்பற்றுவார்கள்.

எடியூரப்பாவின் வாக்குமூலத்தை பெறுவார்கள். அவசியம் என்றால் சிஐடி போலீசாரால் எடியூரப்பா கைது செய்யப்படுவார். அது அவசியமா என்று என்னால் சொல்ல முடியாது. சிஐடி அதிகாரிகள் சொல்வார்கள். அவர்கள் அவசியம் என்று உணர்ந்தால், அதை செய்வார்கள்" எனத் தெரிவித்திருந்தார்.

Tags:    

Similar News