ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வேஸ்ட்... பெரிய போர்டு தொங்கவிட்ட பெங்களூரு பெண்
- ஓலா எலக்ட்ரிக்கிற்கு எதிராக நான் விழிப்புணர்வை பரப்புவேன்.
- "விரக்தியடைந்த ஓலா வாடிக்கையாளர்" என்று பிளக்ஸ் கார்டில் கையெழுத்திட்டு உள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த நிஷா என்பவர், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பயணத்தின்போது பலமுறை பழுதடைந்ததால், இதனை வாங்க வேண்டாம் என்று மற்றவர்களை எச்சரித்துள்ளார்.
நிஷா சி சேகர் என்ற அந்த வாடிக்கையாளர், கஸ்டமர் கேர் (customer care) மென்பொருளை புதுப்பித்ததாகவும், ஆனால் சிக்கல் நீடித்ததாகவும் கூறி உள்ளார்.
ஸ்கூட்டரை பெற கிட்டத்தட்ட ஒரு மாதம் காத்திருக்க வேண்டியிருந்தது என்றும், முழுத் தொகையையும் ரொக்கமாகச் செலுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
ஓலா எலக்ட்ரிக்கிற்கு எதிராக நான் விழிப்புணர்வை பரப்புவேன் என்று தெரிவித்துள்ள அவர் தனது எக்ஸ் பதிவில், தனது ஸ்கூட்டரின் படத்தை பகிர்ந்துள்ளார். அதில்,
அன்புள்ள கன்னடர்களே, ஓலா ஒரு பயனற்ற இருசக்கர வாகனம். நீங்கள் ஒன்றை வாங்கினால், அது உங்கள் வாழ்க்கையை கடினமாக்கும். தயவுசெய்து ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்காதீர்கள்.
"விரக்தியடைந்த ஓலா வாடிக்கையாளர்" என்று பிளக்ஸ் கார்டில் கையெழுத்திட்டு உள்ளார். தனது ஸ்கூட்டரில் பிளக்ஸ் கார்டைத் தொங்கவிட்டு, அதைப் பார்க்கும் அனைவருக்கும் வாகனத்தை பற்றிய உண்மை சரிபார்ப்பை கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு, அதை வாங்குவதை மறுபரிசீலனை செய்யுமாறு வலியுறுத்தி உள்ளார்.