பீகார்: தேஜஸ்வி யாதவ் யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் பிரமாண்டமாய் நடைபெற்றது
- தேஜஸ்வி யாதவ் பீகார் முழுவதும் 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு திரட்ட முடிவு செய்தார்.
- பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் ஜன் விஸ்வாஸ் நிறைவு விழா பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெற்றது
பாட்னாவில் 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற தேஜஸ்வி யாதவின் 'ஜன் விஷ்வாஸ்' யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பெருவாரியான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் தயாராகி வருகிறது. லாலு பிரசாத் யாதவின் மகனும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் பீகார் முழுவதும் 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு திரட்ட முடிவு செய்தார்.
இந்நிலையில், பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் ஜன் விஸ்வாஸ் நிறைவு விழா பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மத்தியப்பிரதேசத்தில் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, தனது யாத்திரையை தள்ளி வைத்து விட்டு, பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேஜஸ்வி யாதவின் ஜன் விஸ்வாஸ் பேரணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் கலந்து கொண்ட வீடியோவை தேஜஸ்வி யாதவ் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "15 மணி நேரம் தொடர் மழை, கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய லட்சக் கணக்கான மக்கள், குறுகிய நேரத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் என அனைத்தையும் மீறி, உங்கள் அளப்பரிய அன்பினாலும், தளராத ஆதரவினாலும், அபரிமிதமான ஒத்துழைப்பினாலும் இந்த சாதனைப் பேரணி நிறைவு பெற்றது" என தெரிவித்துள்ளார்.
15 घंटों से लगातार बारिश, भारी ट्रैफिक जाम में फँसे लाखों लोग, मात्र 15 दिन पूर्व निर्धारित रैली, अल्प समय में बड़ी तैयारी! इन सब के बावजूद आपके असीम प्यार, अटूट समर्थन और अपार सहयोग से यह रिकॉर्डतोड़ ऐतिहासिक रैली संपन्न हुई।
— Tejashwi Yadav (@yadavtejashwi) March 3, 2024
आप सबों को #जन_विश्वास_महारैली और #जन_विश्वास_यात्रा… pic.twitter.com/UNLoWBCOOa