நடு இரவில் கண் ஆஸ்பத்திரிக்குள் புகுந்த பாஜகவினர்.. நோயாளிகளை எழுப்பி உறுப்பினர் சேர்க்கை - வீடியோ
- மக்களை உளவியல் ரீதியாக கவரும் பொய்க் கணக்கு என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின.
- ஒவ்வொருவராக போன் நம்பரை கேட்டு OTP நம்பரை சொல்லச்சொல்லி தொந்தரவு செய்துள்ளனர்.
இந்தியா முழுவதும் அதிக உறுப்பினர்களைச் சேர்க்கும் இலக்கோடு பாஜக உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் உ.பி.யில் 2 கோடி புதிய உறுப்பினர்களைச் சேர்த்ததாக பாஜக கணக்கு காட்டியது. ஆனால் இது மக்களை உளவியல் ரீதியாக கவரும் பொய்க் கணக்கு என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டின.
அதிக உறுப்பிடர்களை சேர்க்க கட்சி மேலுடம் அழுத்தம் கொடுப்பதாலும், எந்த பகுதியில் அதிகம் உறுபினர்கள் சேர்க்கப்படுகிறார்கள் என்ற போட்டியும் கட்சிக்குள் உள்ளது. அந்த வகையில் குஜராத்தில் நடந்த பாஜக உறுப்பினர் சேர்க்கை சம்பவம் ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள ரன்சோதாஸ் பாபு டிரஸ்ட் கண் மருத்துவமனையில் நடு இரவில் புகுந்த பாஜகவினர் அங்கு கேடராக்ட் கண் அறுவை சிகிச்சை செய்து படுத்து தூக்கிக்கொண்டிருந்த நோயாளிகள் அனைவரையும் எழுப்பி அவர்களை உறுப்பினர்களாகச் சேர்த்துள்ளனர்.
அவர்களை எழுப்பி ஒவ்வொருவராக போன் நம்பரை கேட்டு OTP நம்பரை சொல்லச்சொல்லி தொந்தரவு செய்துள்ளனர். மேலும் அவர்களின் போன்களில் கட்சி உறுப்பினராகச் சேர்க்கப்பட்டதன் கன்பர்மேஷன் மெசேஜ் வந்த பிறகே பாஜகவினர் அங்கிருந்து நகர்ந்துள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய மருத்துவமனை டிரஸ்ட் தலைவர், தங்கள் டிரஸ்ட் மூலம் இலவச கண்சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அதை தவறாக பயன்படுத்தியுள்ளது வருந்தத்தக்கது. இந்த விவகாரத்தில் எங்களது டிரஸ்ட் உறுப்பினர் யாருக்கேனும் தொடர்பிருந்தால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக விசாரித்து வருவதாக ராஜ்கோட் பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதை பலர் நகைக்கத்தக்க விஷயமாக பார்த்தாலும், இந்த பிரச்சனையின் தீவிரம் குறித்தும் சிலர் எச்சரிக்கின்றனர்.