இந்தியா
மத்திய பிரதேசத்தில் பள்ளி கழிவறையை கையால் சுத்தம் செய்த பா.ஜ.க எம்.பி.
- பள்ளி வளாகத்தில் இருந்த கழிவறை மிக மோசமான நிலையில் அசுத்தமாக இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
- ஜனார்த்தன மிஸ்ரா எம்.பி. கடந்த 2018- ம் ஆண்டும் இதேபோல் கழிவறையை சுத்தம் செய்தார்.
போபால்:
மத்தியபிரதேச மாநிலம் காட்காரி கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் மரக்கன்று நடும் விழா நடந்தது. இதில் பாரதிய ஜனதா எம்.பி. ஜனார்த்தன மிஸ்ரா கலந்து கொண்டார். அப்போது பள்ளி வளாகத்தில் இருந்த கழிவறை மிக மோசமான நிலையில் அசுத்தமாக இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனே சிறிதும் தாமதிக்காமல் ஒரு வாளியில் தண்ணீரை எடுத்து வந்து வெறும் கையால் கழிவறையை சுத்தம் செய்தார்.
எந்தவித உபகரணமும் இல்லாமல் அவர் கழிவறையை சுத்தப்படுத்தியது அங்குள்ளவர்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த காட்சிகளை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஜனார்த்தன மிஸ்ரா எம்.பி. கடந்த 2018- ம் ஆண்டும் இதேபோல் கழிவறையை சுத்தம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.