இந்தியா

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும் மல்லிகார்ஜூன கார்கே?

Published On 2024-06-09 05:18 GMT   |   Update On 2024-06-09 05:18 GMT
  • 30 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல்.
  • மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக பல்வேறு கட்சிகள் அறிவித்தன.

மக்களவை தேர்தலில் 292 இடங்களில் வெற்றி பெற்று பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது. இன்று இரவு 7.15 மணிக்கு நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். இவருடன் 30 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுக்க பல்வேறு அரசியல் தலைவர்கள், தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இதனிடையே மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக இந்தியா கூட்டணியை சேர்ந்த பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில், நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு இன்று காலை ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. இது குறித்து காங்கிரஸ் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. 

Tags:    

Similar News