அருணாச்சலப் பிரதேசம் சட்டமன்ற தேர்தல்- வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது பாஜக
- முதல்வர் பெமா காண்டுவை அவரது சொந்த தொகுதியான முக்டோவில் பாஜக நிறுத்தியுள்ளது.
- 60 வேட்பாளர்களில், பாஜக தனது பெரும்பாலான எம்.எல்.ஏ-க்களைத் தக்கவைத்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ளது.
மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ள போட்டியாளர்களின் 2ம் கட்ட பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது.
இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 60 வேட்பாளர்கள் பட்டியலை பாஜக அறிவித்துள்ளது.
இதில், அம்மாநில முதல்வர் பெமா காண்டுவை அவரது சொந்த தொகுதியான முக்டோவில் பாஜக நிறுத்தியுள்ளது. இது, பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தவாங் மாவட்டத்தின் கீழ் வரும் மூன்று தொகுதிகளில் இதுவும் ஒன்று.
இந்த 60 வேட்பாளர்களில், பாஜக தனது பெரும்பாலான எம்.எல்.ஏ-க்களைத் தக்கவைத்துள்ளது.
கடந்த திங்கள் அன்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெற்ற கட்சியின் மத்திய தேர்தல் குழு (சிஇசி) கூட்டத்தைத் தொடர்ந்து இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுடன் அருணாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது.
முன்னதாக 2019 மாநில சட்டமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 60 சட்டமன்றத் தொகுதிகளில் 57 இடங்களைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.