தேர்தலில் வாக்களிக்காத பாலிவுட் பிரபலங்கள் - ஏன் தெரியுமா?
- பிரபல பாவுட் நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தனர்.
- பிரபல நடிகர் சையிப் அலிகான் மற்றும் நடிகை கரீனா கபூர் ஆகியோர் வாக்களித்தனர்.
பாராளுமன்ற தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து முடிந்தது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடிகர் அமிதாப் பச்சான் மற்றும் அவரது மனைவியும் எம்.பி.,மான ஜெயா பச்சன் ஆகியோர் வாக்களித்தனர்.
பாலிவுட் நடிகர்களான சாரா அலிகான் மற்றும் அம்ரிதா சிங் ஆகியோர் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
பிரபல பாவுட் நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தனர்.
இதேபோல், பிரபல நடிகர் சையிப் அலிகான் மற்றும் நடிகை கரீனா கபூர் ஆகியோர் வாக்களித்தனர்.
இந்நிலையில் இந்திய குடியுரிமை இல்லாததால் பல பாலிவுட் பிரபலங்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை.
பிரிட்டிஷ் குடியுரிமை காரணமாக நடிகைகள் ஆலியா பட், கத்ரீனா கைஃப் மற்றும் அமெரிக்கா குடியுரிமை காரணமாக நடிகர் இம்ரான் கான், சன்னி லியோன் மற்றும் இலங்கை குடியுரிமை காரணமாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் போர்த்துகீசிய குடியுரிமை காரணமாக இலியானா ஆகியோர் வாக்களிக்க வில்லை.