இந்தியா

ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published On 2024-08-22 06:46 GMT   |   Update On 2024-08-22 06:46 GMT
  • விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
  • ஏர் இந்தியா விமானம் அவரசமாக தரையிறக்கப்பட்டது.

திருவனந்தபுரம்:

மும்பையில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் இன்று அதிகாலை 5.45 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்டது. விமானத்தில் பயணிகள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 135 பேர் இருந்தனர்.

இந்நிலையில் அந்த விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு சற்று நேரத்துக்கு முன்னமாக விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருக்கிறது.

இதுகுறித்து அந்த விமானத்தின் விமானி, திருவனந்தபுரம் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் மும்பை விமானம் தரையிறங்கியதும் சோதனை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயாராக வைக்கப்பட்டன. இதையடுத்து ஏர் இந்தியா விமானம் அவரசமாக தரையிறக்கப்பட்டது.

அந்த விமானம் வழக்க மாக காலை 8.10 மணிக்கு தரை யிறங்கும். வெடிகுண்டு மிரட்டல் வந்ததன் காரண மாக 10 நிமிடத்துக்கு முன்ன தாக 8 மணிக்கு தரை யிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும், விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

 பின்பு விமானத்துக்குள் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. பயணி களின் இருக்கை, கழிவறை, லக்கேஜ் வைக்கும் இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை செய்யப்பட்டது. விமா னத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவத்தால் திருவ னந்தபுரத்தில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News