இந்தியா (National)

புனேவை உலுக்கிய சொகுசு கார் விபத்தில் சிறுவனுக்கு ஜாமின்

Published On 2024-06-25 10:31 GMT   |   Update On 2024-06-25 10:31 GMT
  • சொகுசு கார் மோதியதில் இரண்டு ஐ.டி. ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
  • சிறுவனை காப்பாற்ற மறைமுக வேலைகள் நடைபெற்றன.

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 17 வயது சிறுவன் மதுபோதையில் ஓட்டி வந்த சொகுசு கார் மோதியதில் இரண்டு ஐ.டி. ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து வழக்கில் சிறுவன் குற்றம் சாட்டப்பட்டவர், அவர் ஜாமினில் வெளிவந்திருந்தார். இச்சம்பவம் அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த விபத்தில் அந்த சிறுவனை காப்பாற்ற மறைமுக வேலைகள் நடைபெற்றன.

ஆனால் பொதுமக்கள், ஊடகங்கள் கடுமையாக எதிர்த்ததன் விளைவாக அந்த சிறுவனின் ஜாமின் ரத்து செய்யப்பட்டு சிறார் முகாமில் அடைக்கப்பட்டுள்ளான்.

இந்நிலையில் புனே சொகுசு கார் விபத்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவனை கண்காணிப்பு இல்லத்தில் தொடர்வது சட்டவிரோதமானது என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த சிறுவனின் காவலை அவரது தந்தை வழி அத்தையிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags:    

Similar News