இந்தியா

விழுந்து நொறுங்கிய சிவாஜி சிலை.. தலை குனிந்து மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி

Published On 2024-08-30 11:00 GMT   |   Update On 2024-08-30 12:09 GMT
  • சிலர் வீர் சாவர்க்கரை அவமதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
  • சிலை இடிந்து விழுந்தது தொடர்பாக சிவாஜி மகாராஜிடம் முதலில் மன்னிப்பு கேட்டேன்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்துதுர்க் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலை இடிந்து விழுந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

"சத்ரபதி சிவாஜி மகாராஜ் என்பது வெறும் பெயரோ அரசரோ இல்லை. நமக்கு அவர் தெய்வம். இன்று, நான் அவரது காலடியில் தலை வணங்குகிறேன், என் தெய்வத்திடம் மன்னிப்பு கேட்கிறேன். எங்கள் மதிப்புகள் வேறுபட்டவை. எங்களைப் பொறுத்தவரை, எங்கள் தெய்வத்தை விட பெரியது எதுவுமில்லை."

"சிலர் வீர் சாவர்க்கரை அவமதிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர், ஆனால் அவரை அவமதித்ததற்காக மன்னிப்பு கேட்க அவர்கள் தயாராக இல்லை. நான் இங்கு இறங்கியதும், சிலை இடிந்து விழுந்தது தொடர்பாக சிவாஜி மகாராஜிடம் முதலில் மன்னிப்பு கேட்டேன், இடிந்து விழுந்ததில் பாதிக்கப்பட்ட மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்."

"கடந்த பத்து ஆண்டுகளில், மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக நாங்கள் தொடர்ச்சியாக முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். மகாராஷ்டிரா திறன் மூலம் கிடைக்கும் பலன்களை இந்த மாநிலமும், முழு நாடும் பெறுவதை உறுதிசெய்வதற்காகவே வத்வான் துறைமுகத்திற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது," என பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags:    

Similar News