இந்தியா
மேகதாது அணை விரைவில் கட்டப்படும்: பட்ஜெட்டில் சித்தராமையா உறுதி
- கர்நாடக மாநில சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
- முதல் மந்திரி சித்தராமையா நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தின் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. முதல் மந்திரி சித்தராமையா 2024-25ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.
அப்போது, தேவையான அனுமதிகளை விரைவில் பெற்று மேகதாதுவில் அணை கட்டப்படும். அங்கு அணை கட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. இதற்காக ஒரு தனி மண்டல குழுவும், இரண்டு துணை மண்டல குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. அனுமதி கொடுத்தால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும்.
பெங்களூரு குடிநீர் பிரச்சனையை தீர்ப்போம். மேகதாது அணை கட்டும் போது நீருக்குள் செல்லும் நிலப்பரப்பு மற்றும் வெட்டப்பட வேண்டிய மரங்களை அடையாளப்படுத்தும் பணி நிறைவு அடைந்துள்ளது என தெரிவித்தார்.
இந்த பட்ஜெட் உரையை சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக வாசித்தார்.