பட்ஜெட் தொடர் நிறைவு: தேதி குறிப்பிடப்படாமல் அவைகள் ஒத்தி வைப்பு
- தொடர் முழுவதும் இந்திய பாராளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் நடைபெற்றது
- பிரதமர் மோடி அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்
வரும் ஏப்ரல்-மே மாத இடையில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது.
கடந்த ஜனவரி 31 அன்று பாராளுமன்றத்தின் 17-வது மக்களவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது.
கடந்த பிப்ரவரி 1 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இக்கூட்டத்தொடர் முழுவதும் இந்திய பாராளுமன்றத்தின் புதிய கட்டிடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தொடரின் கடைசி அமர்வு இன்று நடைபெற்றது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கும், அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, "இந்த அமர்வில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன" என தெரிவித்தார்.
இதையடுத்து, பட்ஜெட் தொடர் நிறைவடைந்து, முதலில் மக்களவையும், பிறகு மாநிலங்களவையும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டன.
இத்துடன் 17-வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடரும் நிறைவுக்கு வந்தது.
மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில், 17-வது அவையில், கடந்த 5 வருட காலங்களில், 222 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.