இந்தியா

மலைப்பாதையில் தீப்பிடித்து எரிந்த பஸ்- 24 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

Published On 2022-11-28 07:05 GMT   |   Update On 2022-11-28 07:05 GMT
  • பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றது. இதனை கண்ட பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.
  • பஸ் முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், அல்லூரி சீதா ராமராஜ் மாவட்டம், அனந்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து 24 பயணிகளுடன் தனியார் பஸ் அரக்கு என்ற பகுதிக்கு சென்று கொண்டு இருந்தது.

மலைப்பாதையில் பஸ் வளைவில் சென்று கொண்டு இருந்தது. அப்போது திடீரென பஸ்சின் முன்பக்க டயர் கழன்று ஓடியது.

இதனால் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றது. இதனை கண்ட பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.

இந்த நிலையில் பஸ் மலைப்பாதை தடுப்பு சுவரில் மோதி நின்றது. பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு பஸ்சிலிருந்து கீழே இறங்கினர். அப்போது பஸ் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதுகுறித்து பயணிகள் விஜயநகரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள் பஸ் முழுவதும் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதுகுறித்து அனந்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News