ரூ.240 கோடியை 4 மாத பேரனுக்கு 'கிப்ட்' ஆக வழங்கிய தொழில் அதிபர்
- 15 லட்சம் ஷேர்களை நாராயண மூர்த்தி தற்போது அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார்
- இன்போசிஸ் நிறுவனத்தில் நாராயண மூர்த்தியின் பங்கு 0.40 சதவீதத்தில் இருந்து 0.36 சதவீதமாக குறைந்துள்ளது
இன்போசிஸ் (infosys) ஐ.டி.நிறுவனம் 1981- ல் தொடங்கப்பட்டது. இந்தியாவின் பிரபல நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இதன் ' நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி.
இந்தியாவின் முக்கிய கோடீஸ்வரர்களில் இவர் முக்கியமானவர். இவரது மகன் ரோஹன் மூர்த்தி - அபர்ணா தம்பதிகளுக்கு கடந்த நவம்வர் மாதம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஏககிரா ரோஹன் என பெயர் சூட்டப்பட்டது.
இந்த குழந்த மூலம் நாராயண மூர்த்தி தாத்தா ஆனார். இந்நிலையில் தனது 4 மாத பேரன் ஏககிரா ரோஹனுக்கு இன்போசிஸ் நிறுவனத்தின் 15 லட்சம் ஷேர்களை நாராயண மூர்த்தி தற்போது அன்பளிப்பாக வழங்கி இருக்கிறார்.
இந்த ஷேர்களின் மொத்த மதிப்பு ரூ.240 கோடி. இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தின் 0.04 சதவீத பங்குகளுக்கு ஏககிரா ரோஹன் உரிமையாளர் ஆகியுள்ளார். மேலும், இன்போசிஸ் நிறுவனத்தில் நாராயண மூர்த்தியின் பங்கு 0.40 சதவீதத்தில் இருந்து 0.36 சதவீதமாக குறைந்துள்ளது.