இந்தியா

பிரமாண்டமான பங்களா: ஒப்பந்ததாரருக்கு ரூ.1 கோடி மதிப்பிலான ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்த தொழிலதிபர்

Published On 2024-11-01 06:27 GMT   |   Update On 2024-11-01 06:27 GMT
  • 2 வருட காலத்தில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு, தினசரி பணியாளர்களை நிர்வகித்து இப்பணியை முடித்துள்ளார்.
  • ஒப்பந்ததாரரின் தரம், வேகம் அர்ப்பணிப்பு பாராட்டிற்குரியது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் குர்தீப் தேவ் பாத், தனது 9 ஏக்கர் நிலத்தில் கட்டிட பணிக்காக தனது ஒப்பந்ததாரர் ரவீந்தர் சிங் ரூப்ராவிற்கு ரூ.1 கோடி மதிப்பிலான ரோலக்ஸ் வாட்ச்சை பரிசளித்துள்ளார். ரோலக்ஸ் வாட்ச், 18 காரட் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபின் ஜிராக்பூர் அருகே கட்டப்பட்டுள்ள ஆரம்பர பங்களா கோட்டையை போல் உள்ளது. இதுதொடர்பாக தொழிலதிபர் குர்தீப் தேவ் பாத் கூறுகையில்,

பஞ்சாப் மாநிலம் ஷாகோட்டை சேர்ந்த ஒப்பந்ததாரரான ரூப்ரா, 2 வருட காலத்தில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு, தினசரி பணியாளர்களை நிர்வகித்து இப்பணியை முடித்துள்ளார். அவரது தரம், வேகம் அர்ப்பணிப்பு பாராட்டிற்குரியது.

இது ஒரு வீடு மட்டுமல்ல. இது பிரமாண்டமான அறிக்கை. காலமற்ற நேர்த்தியை பிரதிபலிக்கும் வகையில் கவனமாக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது. அவரது அர்ப்பணிப்பு, நான் கேட்டதை விட அதிகமாக வழங்கியுள்ளது. தான் விரும்பிய ஆடம்பர பங்களாவை சிறப்பாக கட்டி கொடுத்ததற்காக பரிசு அளித்ததாக அவர் தெரிவித்தார்.

கட்டிடக்கலைஞர் ரஞ்சோத் சிங்கால் செயல்படுத்தப்பட்ட வடிவமைப்பு, எஸ்டேட்டைச் சூழ்ந்துள்ள ஒரு பரந்த எல்லை சுவரைக் கொண்டுள்ளது, இது ஒரு தனியார் கோட்டையாக அமைந்துள்ளது.

Tags:    

Similar News