இந்தியா (National)

கட்சித்தலைவர் சுட்டுக்கொலை: ராஜஸ்தானில் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த அரசியல் அமைப்பு

Published On 2023-12-06 05:20 GMT   |   Update On 2023-12-06 05:54 GMT
  • ராஜபுத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
  • துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடிவருவதாக போலீசார் தெரிவித்தனர்.

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வலதுசாரி ஆதரவு அமைப்பான ஸ்ரீ ராஷ்ட்ரிய ராஜபுத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுகதேவ் சிங் கோகமெடி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சுகதேவ் தனது வீட்டில் நேற்று மதியம் பேசிக்கொண்டிருந்த நிலையில், திடீரென புகுந்த 3 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் சுகதேவ் சிங் கோகமெடி உயிரிழந்தார்.

அவருடன் பேசிக்கொண்டிருந்த நபர் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடிவருவதாக போலீசார் தெரிவித்தனர்.


ராஜபுத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் படுகொலைக்கு வசுந்தர ராஜே சிந்தியா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், ராஜஸ்தானில் அரசியல் கட்சி தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பு இன்று ராஜஸ்தானில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அந்த அமைப்பினர் நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ராஜஸ்தானில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Tags:    

Similar News