இந்தியா

தமிழகத்தில் 5 புதிய மருத்துவக்கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி

Published On 2024-07-09 02:05 GMT   |   Update On 2024-07-09 02:05 GMT
  • அதிகபட்சமாக 22 கல்லூரிகள் உத்தரபிரதேசத்திலும், 14 கல்லூரிகள் மகாராஷ்டிரத்திலும் அமையவுள்ளன.
  • 5 புதிய கல்லூரிகளுடன் சேர்த்து அந்த எண்ணிக்கை 63 ஆக உயர உள்ளது.

புதுடெல்லி:

தேசிய மருத்துவ ஆணையம் நாடு முழுவதும் 113 புதிய மருத்துவக்கல்லூரிகளை தொடங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது. இதில் அதிகபட்சமாக 22 கல்லூரிகள் உத்தரபிரதேசத்திலும், 14 கல்லூரிகள் மகாராஷ்டிரத்திலும் அமையவுள்ளன

தமிழகத்தை பொறுத்தவரை விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா ஓங்கூர், விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், சென்னை அவனம்பட்டு, மற்றும் கன்னியாகுமரியில் தனியார் சார்பில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன.

தேசிய மருத்துவ ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் படிப்புக்கு 36 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 22 தனியார் மருத்துவக் கல்லூரிகளுமாக மொத்தம் 58 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த 5 புதிய கல்லூரிகளுடன் சேர்த்து அந்த எண்ணிக்கை 63 ஆக உயர உள்ளது. இதைப்போல நாடு முழுவதும் 706 மருத்துவக் கல்லூரிகளுடன் புதிய மருத்துவக் கல்லூரிகள் 113- ஐயும் சேர்த்து மொத்தம் 819 மருத்துவக் கல்லூரிகளாக அதிகரிக்க இருக்கிறது.

Tags:    

Similar News