இந்தியா

விக்கிபீடியாவை ஏன் வெளியீட்டாளராக கருதக்கூடாது- மத்திய அரசு கேள்வி

Published On 2024-11-06 02:27 GMT   |   Update On 2024-11-06 02:27 GMT
  • பலரும் தன்னார்வத்துடன் பல தலைப்புகளில் பக்கங்களை உருவாக்கலாம்.
  • தவறான மற்றும் அவதூறான உள்ளடக்கம் தொடர்பாக விக்கிபீடியா மீது வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி:

விக்கிபீடியா சமூக வலைத்தள தகவல் களஞ்சியமாக கருதப்படுகிறது. அங்கு அனைத்து துறை பற்றிய தகவல்களையும் பார்க்கலாம். பலரும் தன்னார்வத்துடன் பல தலைப்புகளில் பக்கங்களை உருவாக்கலாம். அதேபோல பக்கங்களை திருத்தவும் செய்யலாம்.

இந்த தளத்தில் இடம்பெறும் தகவல்களில் துல்லியத் தன்மை இல்லாததாகவும், பாரபட்சமான தகவல்கள் அடங்கி இருப்பதாகவும் புகார் எழுந்தது. தவறான மற்றும் அவதூறான உள்ளடக்கம் தொடர்பாக விக்கிபீடியா மீது வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து இதுகுறித்து கேள்வி எழுப்பி, மத்திய அரசு விக்கிபீடியாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதில், "விக்கிபீடியாவை ஏன் மத்தியஸ்த/இடைத்தரக ஊடகமாக பார்க்காமல் ஒரு வெளியீட்டாளராக கருதக்கூடாது" என்று விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News