இந்தியா

மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு ரூ.1.18 லட்சம் கோடி விடுவிப்பு- தமிழ்நாட்டுக்கு ரூ.4,825 கோடி

Published On 2023-06-13 03:41 GMT   |   Update On 2023-06-13 03:41 GMT
  • 3-வது தவணை வரி பகிர்வாக இந்த மாதம் மாநிலங்களுக்கு ரூ.59 ஆயிரத்து 140 கோடி வழங்க வேண்டும்.
  • தமிழ்நாட்டுக்கான பங்காக ரூ.4 ஆயிரத்து 825 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

மத்திய அரசு தனது வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயை மாநிலங்களுக்கு மாதந்தோறும் பகிர்ந்து அளித்து வருகிறது.

அந்தவகையில், 3-வது தவணை வரி பகிர்வாக இந்த மாதம் மாநிலங்களுக்கு ரூ.59 ஆயிரத்து 140 கோடி வழங்க வேண்டும்.

ஆனால், இந்த வழக்கமான தவணையுடன், முன்கூட்டியே ஒரு தவணையை சேர்த்து, மத்திய அரசு நேற்று விடுவித்தது. ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 280 கோடி விடுவித்தது. இதன்மூலம், மாநிலங்களுக்கு இரட்டிப்பு தொகை கிடைத்துள்ளது.

மாநிலங்கள் தங்களது மூலதன செலவுகளை விரைவுபடுத்தவும், வளர்ச்சி மற்றும் நல்வாழ்வு திட்டங்களின் நிதித்தேவைக்காகவும், முன்னுரிமை திட்டங்களின் நிதி ஆதாரத்துக்காகவும் இதுபோன்று முன்கூட்டியே ஒரு தவணையை மத்திய அரசு விடுவித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டுக்கான பங்காக ரூ.4 ஆயிரத்து 825 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

மாநில வாரியாக விடுவிக்கப்பட்ட வரிபங்கீடு வருமாறு:-

ஆந்திரா-ரூ.4,787 கோடி. அருணாசலபிரதேசம்-ரூ.2,078 கோடி. அசாம்-ரூ.3,700 கோடி. பீகார்-ரூ.11,897 கோடி. சத்தீஸ்கர்-ரூ.4,030 கோடி. கோவா-ரூ.457 கோடி. குஜராத்-ரூ.4,114 கோடி. அரியானா-1,293 கோடி. இமாசலபிரதேசம்-ரூ.982 கோடி. ஜார்கண்ட்-ரூ.3,912 கோடி. கர்நாடகா-ரூ.4,314 கோடி.

கேரளா-ரூ.2,277 கோடி. மத்தியபிரதேசம்-ரூ.9,285 கோடி. மகாராஷ்டிரா-ரூ.7,472 கோடி. மணிப்பூர்-ரூ.847 கோடி. மேகாலயா-ரூ.907 கோடி. மிசோரம்-ரூ.591 கோடி. நாகாலாந்து-ரூ.673 கோடி.

ஒடிசா-ரூ.5,356 கோடி. பஞ்சாப்-ரூ.2,137 கோடி. ராஜஸ்தான்-ரூ.7,128 கோடி. சிக்கிம்-ரூ.459 கோடி. தெலுங்கானா-ரூ.2,486 கோடி. திரிபுரா-ரூ.837 கோடி. உத்தரபிரதேசம்-ரூ.1,322 கோடி. மேற்கு வங்காளம்-ரூ.8,898 கோடி.

Tags:    

Similar News