இந்தியா

சபாநாயகர், 5 அமைச்சர்கள்.. முக்கிய பதவிகளை லிஸ்ட் போடும் சந்திரபாபு நாயுடு

Published On 2024-06-06 05:48 GMT   |   Update On 2024-06-06 05:48 GMT
  • பா.ஜ.க.வுக்கு நிபந்தனைகளை விதித்து இருப்பதாக தகவல்.
  • விரும்பும் இாக்காகள் அடங்கிய பட்டியல் ஜே.பி. நட்டாவுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல்.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காததால் சந்திரபாபு நாயுடு ஆதரவு கட்டாயமாகி உள்ளது. அரசியலில் பல ஆண்டுகால அனுபவசாலியான சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலத்திற்கு தேவையானவற்றை கேட்பதில் கில்லாடியாக செயல்பட்டு வருகிறார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பா.ஜ.க.வுக்கு அவர் சில நிபந்தனைகளை விதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த வகையில் மத்திய அமைச்சரவையில் மூன்று கேபினட், இரண்டு இணை அமைச்சர் பதவிகளை வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். குறிப்பாக சபாநாயகர் பதவியை தெலுங்கு தேசம் கட்சிக்கு தர வேண்டும் என அவர் கேட்டுள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த பால யோகி மக்களவை சபாநாயகராக இருந்தார். அதேபோல இந்த முறையும் சபாநாயகர் பதவி தர வேண்டும் என சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

இதேபோல நிதித்துறை, வேளாண்மைத்துறை, நீர்வளத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, ஊரக மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, சுகாதரம், கல்வித்துறை உள்ளிட்ட மந்திரி பதவிகளை தெலுங்கு தேசம் கட்சி கேட்டு சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி உள்ளர் என்று தகவல் வெளியாகி உள்ளது.

விரும்பும் இாக்காகள் அடங்கிய பட்டியலை தெலுங்கு தேசம் சார்பில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News