மணிப்பூர் விவகாரம் - மத்திய பா.ஜ.க. அரசு கோமா நிலையில் உள்ளது என ப.சிதம்பரம் தாக்கு
- வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பா.ஜ.க. அரசு வீழ்ச்சி அடைந்து விட்டது.
- மத்திய பா.ஜ.க. அரசு கோமாவில் உள்ளதாக ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பா.ஜ.க. அரசு வீழ்ச்சி அடைந்து விட்டதாகவும், மத்திய பா.ஜ.க. அரசு கோமாவில் உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் பீகார், மேற்கு வங்காளம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை ஒப்புக்கொள்வோம்.
ஆனால், மணிப்பூரில் தொடரும் இடைவிடாத வன்முறைக்கு, பிற மாநில பிரச்சினைகளில் இருந்து எப்படி பரிகாரம் தேடிக் கொள்ள முடியும்? எப்படி அதனை மன்னிக்க முடியும்?
பீகார், மேற்குவங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடுமையான நடவடிக்கை தேவைப்பட்டால், மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்துங்கள்.
ஆனால் மணிப்பூரில் நடக்கும் காட்டுமிராண்டித்தனத்தை மன்னிக்க முடியாது.
மணிப்பூர் பா.ஜ.க. அரசு வீழ்ச்சியடைந்து விட்டது. மத்திய பா.ஜ.க. அரசு கோமாவில் உள்ளது என பதிவிட்டுள்ளார்.