38 சதவீத பெண் எம்.பி.க்களைக் கொண்ட ஒரே கட்சி திரிணாமுல் காங்கிரஸ்: மம்தா பெருமிதம்
- மேற்கு வங்காளத்தில் இன்று தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
- முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் அங்கு பேரணி நடைபெறுகிறது.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தின் இளைஞர் காங்கிரஸ் சார்பில் 1993-ம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அதனை நினைவுகூரும் வகையில் தியாகிகள் தினம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது.
தியாகிகள் தினத்தை முன்னிட்டு முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெறுகிறது. இந்தப் பேரணியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார்.
கொல்கத்தா நகரில் எஸ்பிளனேடு பகுதியில் தர்மதலா என்ற இடத்தில் நடக்கும் பேரணியில் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.
இந்நிலையில், இந்தப் பேரணியில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது:
தேர்ந்தெடுக்கப்பட்ட 38 சதவீத பெண் எம்.பி.க்களைக் கொண்ட ஒரே கட்சி திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே.
தேர்தலுக்கு முன் அரசியலில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதாக பலர் கூறினர்.
ஆனால் அதை செய்ய முடியவில்லை. 38 சதவீதம் பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்த ஒரே கட்சி நாங்கள்தான் என தெரிவித்தார்.