இந்தியா

எத்தனை மாநில முதல்வர்கள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தனர் தெரியுமா?

Published On 2024-07-27 20:38 IST   |   Update On 2024-07-27 20:38:00 IST
  • மம்தாவின் வேண்டுகோளை ஏற்று மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக வாய்ப்பு வழங்கப்பட்டது.
  • நேரம் முடிந்ததும் ராஜ்நாத் சிங் மைக்கை தட்டியதும் மம்தா பானர்ஜி வெளியேறிவிட்டார்.

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, பீகார், டெல்லி, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஜார்கண்ட், கேரளம் மற்றும் புதுச்சேரி ஆகிய 10 மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளவில்லை என நிதி ஆயோக் சிஇஓ சுப்ரமணியம் தெரிவித்தார்.

அதேவேளையில் மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச மாநில துணைநிலை ஆளுநர்கள் என 28 பேர் பங்கேற்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கூட்டத்தில் அவர்கள் பங்கேற்கவில்லை என்றால் அவர்களுக்குத்தான் அது இழப்பு என தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, உணவு இடைவேளைக்கு முன்னதாக பேச வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோள் ஏற்கப்பட்டு பேச அனுமதி வழங்கப்பட்டது.

அவரது நேரம் முடிந்தபோது பாதுகாப்புத்துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் மைக்கை தட்டினார் அப்போது மம்தா தனது பேச்சை முடித்து கொண்டு வெளியேறினார். இருந்தபோதிலும் மேற்கு வங்காளம் மாநில அரசு அதிகாரிகள் தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

சட்டமன்ற கூட்டம் நடைபெற்று கொண்டிருப்பதால் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. கூட்டத்தின் போது சில மாநிலங்கள் ஜீரோ வறுமை என்பது வலியுறுத்தினர். இதனை பிரதமர் மோடி பாராட்டினார். அத்துடன் கிராமப்புற அளவில் இதை இலக்காக கொள்ள வேண்டும் என கூறினார்.

இவ்வாறு சிஇஓ சுப்ரமணியம் தெரிவித்தார்.

Tags:    

Similar News