இந்தியா
null

வர்த்தக ரகசியங்களை திருடியதாக இன்போசிஸ் மீது வழக்கு தொடுத்த காக்னிசன்ட்

Published On 2024-08-24 05:20 GMT   |   Update On 2024-08-24 06:12 GMT
  • காக்னிசன்ட்டின் குற்றச்சாட்டுக்களை இன்போசிஸ் நிறுவனம் மறுத்துள்ளது.
  • வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று இன்போசிஸ் தெரிவித்துள்ளது.

ஹெல்த்கேர் இன்சூரன்ஸ் மென்பொருள் தொடர்பான வர்த்தக ரகசியங்களை திருடியதாக இன்போசிஸ் நிறுவனத்தின் மீது டெக்ஸாஸ் பெடரல் நீதிமன்றத்தில் காக்னிசன்ட்டின் துணை நிறுவனமான டிரிசெட்டோ வழக்கு தொடர்ந்துள்ளது.

ஹெல்த்கேர் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நிர்வாக பணிகளுக்கு காக்னிசன்ட்டின் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதனை அதன் துணை நிறுவனமான டிரிசெட்டோ தயாரித்துள்ளது.

காக்னிசன்ட்டின் இந்த மென்பொருளை அனுமதியின்றி பயன்படுத்தி போட்டியாக மற்றொரு தயாரிப்பை இன்போசிஸ் தயாரித்துள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆனால் காக்னிசன்ட்டின் குற்றச்சாட்டுக்களை இன்போசிஸ் நிறுவனம் முற்றிலுமாக மறுத்துள்ளது. மேலும், காக்னிசன்ட் தொடர்ந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று இன்போசிஸ் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News