விவசாயிகளின் நலனில் உறுதியாக இருக்கிறேன்- பிரதமா் மோடி பதிவு
- கரும்பு கொள்முதல் விலை உயர்வுக்கு வரலாற்று சிறப்புமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
- கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைவார்கள்.
புதுடெல்லி:
கரும்புக்கான குறைந்த பட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.25 உயர்த்தி ரூ.340-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் நலன் தொடர்பாக ஒவ்வொரு தீர்மானத்தையும் நிறைவேற்ற எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த சூழலில் கரும்பு கொள்முதல் விலை உயர்வுக்கு வரலாற்று சிறப்புமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கையால் கோடிக்கணக்கான விவசாயிகள் பயனடைவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
देशभर के अपने किसान भाई-बहनों के कल्याण से जुड़े हर संकल्प को पूरा करने के लिए हमारी सरकार प्रतिबद्ध है। इसी कड़ी में गन्ना खरीद की कीमत में ऐतिहासिक बढ़ोतरी को मंजूरी दी गई है। इस कदम से हमारे करोड़ों गन्ना उत्पादक किसानों को लाभ होगा।https://t.co/Ap14Lrjw8Z https://t.co/nDEY8SAC3D
— Narendra Modi (@narendramodi) February 22, 2024