இந்தியா
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு காங்கிரஸ் ஆதரவு: சோனியா காந்தி
- 2029-ல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமலுக்கு வரும் என தகவல்
- உடனடியாக அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தல்
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இன்றைய 3-வது நாள் முழுவதும் இந்த மசோதா மீதான விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை மக்களவை தொடங்கியதும், பாராளுமன்றத்திற்கான காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பேசினார்.
அப்போது அவர் "காங்கிரஸ் கட்சி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆதரவு அளிக்கும். எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி ஒதுக்கீட்டுடன் கூடிய இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் அது இந்தியப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்'' என்றார்.