இந்தியா

ஆட்சி அமைக்க இப்படி செய்யலாமா?: தெலுங்கானா முதல் மந்திரியை சாடிய டி.கே.சிவகுமார்

Published On 2023-12-02 06:51 GMT   |   Update On 2023-12-02 06:51 GMT
  • தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
  • தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை நடைபெற உள்ளது.

பெங்களூரு:

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த 30-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான பி.ஆர்.எஸ், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே போட்டி நிலவுகிறது.

தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை நடைபெற உள்ளது.

இந்நிலையில், கர்நாடக துணை முதல் மந்திரியும், காங்கிரஸ் தலைவர்களின் ஒருவருமான டி.கே.சிவகுமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தெலுங்கானாவில் மீண்டும் ஆட்சி அமைக்க காங்கிரஸ் வேட்பாளர்கள் ஆதரவளிக்க வேண்டும் என முதல் மந்திரி சந்திரசேகர ராவ் முயற்சி செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக முதல் மந்திரி தங்களை அணுகியதாக எங்கள் வேட்பாளர்கள் எங்களிடம் கூறியுள்ளனர்.

தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

Tags:    

Similar News