300 தொகுதிகளை கைப்பற்றி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்-காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் நம்பிக்கை
- இந்தியா கூட்டணிக்கு 300 இடங்கள் கிடைக்கும்.
- கேரளாவில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
பாராளுமன்ற தேர்த லுக்கு பிறகு அதாவது ஜூன் 4-ந்தேதிக்கு பிறகு இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்போம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்தியா கூட்டணிக்கு 300 இடங்கள் கிடைக்கும்.
இந்த தேர்தலில் மக்கள் மனநிலை இந்தியா கூட்டணிக்கு சாதகமாக இருக்கிறது. தென் மாவட்டங் களில் பா.ஜனதாவை விட நாங்கள் முன்னிலையில் இருக்கிறோம். கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் 3-ல் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
2019 தேர்தலில் தெலுங் கானாவில் 3 இடங்களை மட்டுமே பெற்றோம். ஆனால் இந்த முறை 11 முதல் 12 இடங்கள் கிடைக்கும். கேரளாவில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும்.
தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு ஒரு தொகுதி ஒரு இடம் கூட கிடைக்காது. இந்தியா கூட்டணி அனைத்து தொகுதியிலும் அங்கு வெற்றி பெறும். மராட்டியத்தில் மகாவிகாஸ் அகாரி (இந்தியா கூட்டணி) மொத்த இடத்தில் பாதியை யாவது பெறுவதற்கு தயாராக உள்ளது. பீகாரில் நாங்கள் சிறப்பான நிலையை பெறுவோம்.
உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா 15 முதல் 20 இடங்களை இழக்கும். இந்தியா கூட்டணி 40 இடங்களை பிடிக்கும்.ராஜஸ்தானில் 10, அரியானாவில் 5 முதல் 6 இடங்களும் கிடைக்கலாம் என்பது எங்கள் கணக்காகும்.
பா.ஜனதாவை வீழ்த்து வதற்காக போட்டியிடும் இடங்களை குறைத்து நாங்கள் தியாகம் செய்துள்ளோம். தேர்தல் முடிவுகள் வெளியான 24 மணி நேரத்தில் பிரதமர் வேட்பாளரை நாங்கள் முடிவு செய்வோம். புதிய பிரதமர் 5 ஆண்டுகள் ஆட்சி செய்வார்.
ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவதற்கு காங்கிரஸ் முயற்சியா? என்பது பற்றி பேச இது நேரமில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஒன்றாக அமர்ந்து பிரதமர் வேட்பாளரை முடிவு செய்வோம்.
தேர்தலின் தொடக்கத்தில் பா.ஜனதாவுக்கு 400 இடங்கள் கிடைக்கும் என்று பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்தார். ஆனால் உண்மை நிலை முற்றிலும் மாறி விட்டது. கடந்த முறை வெற்றி பெற்ற பல இடங் களை இழந்து வருவதை பா.ஜனதா உணர்ந்துள்ளது. அந்த கட்சியினர் பீதியில் உள்ளனர்.
இந்த தேர்தலில் உண்மையான பிரச்சினைகளை பிரதமர் பேச விரும்ப வில்லை. மதம் மற்றும் சமூகங்களின் அடிப்படையில் மக்களை பிளவுப் படுத்துவது அவரது நிகழ்ச்சி நிரலாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.