நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம்: காங்கிரஸ் உறுதி
- ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை ஜார்கண்டில் நடைபெற்று வருகிறது.
- இன்று அனைத்து பொதுத்துறை உருக்கு ஆலைகளையும் மோடி அரசு விற்கிறது என்றார் ஜெய்ராம் ரமேஷ்.
ராஞ்சி:
காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் ஈடுபட்டு வருகிறார். யாத்திரை தற்போது
ஜார்கண்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் இன்று 22-வது நாள். நாம் தன்பாத்தில் இருக்கிறோம். விரைவில் பொகாரோவுக்குப் போகிறோம்.
கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என கேள்வி எழுப்புகின்றனர். அவர்கள் பொகாரோவுக்கு வர வேண்டும்.
இன்று அனைத்து பொதுத்துறை உருக்கு ஆலைகளையும் மோடி அரசு விற்கிறது.
81 இடங்கள் கொண்ட ஜார்கண்ட் சட்டசபையில் எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது. ஹேமந்த் சோரனுக்கு கூட சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இது அமலாக்கத் துறையின் சதி. நம்பிக்கை வாக்கெடுப்பில் நாங்கள் வெற்றி பெறுவோம்.
அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறையை இந்திய கூட்டணி உறுப்பினர்களுக்கு எதிராக மோடி அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது என்பது தொடக்கத்திலிருந்தே தெளிவாகத் தெரிகிறது. அவை சுதந்திரமான நிறுவனங்கள் அல்ல என தெரிவித்தார்.