மீட்கப்பட்ட கோடிக்கான பணம்.. இதுதான் உண்மை.. மத்தத அவங்களே சொல்லட்டும்.. தீரஜ் சாகு அதிரடி
- கருப்பு பணம் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார்.
- நூற்றுக்கணக்கான மூட்டைகளில் கருப்பு பணம் மீட்பு.
காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாகு-வுக்கு சொந்தமான பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் நூற்றுக்கணக்கான மூட்டைகளில் பணம் ரொக்கமாக மீட்கப்பட்டது. மேலும், தொடர் சோதனை ஒருபுறமும், மீட்கப்பட்ட பணத்தை எண்ணும் பணிகள் ஒருபுறமும் நடைபெற்றது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, இவரிடம் இருந்து மீட்கப்பட்ட ரொக்கம் மட்டுமே ரூ. 350 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இவைதவிர பல்வேறு பகுதிகளில் ரொக்கம் மற்றும் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் தனக்கு சொந்தமான பகுதிகளில் மீட்கப்பட்ட ரொக்கம் குறித்து காங்கிரஸ் எம்.பி. கருத்து தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசிய அவர், "இந்த பணம் முழுக்க என் குடும்பத்தார் நடத்தும் வியாபார நிறுவனங்களுக்கு சொந்தமானது என்று நான் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். வருமான வரித்துறை சார்பில் இது கருப்பு பணமா இல்லை வெள்ளை பணமா என்பதை தெரிவிக்கட்டும்."
"நான் வியாபார துறையில் இல்லை. எனது குடும்ப உறுப்பினர்கள் இதற்கு பதில் அளிப்பார்கள். மக்கள் இந்த விஷயத்தை எப்படி பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை, ஆனால் இந்த பணத்திற்கும் காங்கிரஸ் மற்றும் இதர அரசியல் கட்சிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை என்னால் நம்பிக்கையுடன் கூற முடியும்," என்று தெரிவித்தார்.