இந்தியா

கவர்னருக்கு எதிராக வரும் 19-ம் தேதி போராட்டம்: கர்நாடகா காங்கிரஸ் அறிவிப்பு

Published On 2024-08-17 15:13 GMT   |   Update On 2024-08-17 15:13 GMT
  • எந்தத் தவறும் செய்யவில்லை என்பதால் ராஜினாமா செய்ய தேவையில்லை.
  • கர்நாடக அரசை சீர்குலைக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்றார்.

பெங்களூரு:

முடா முறைகேடு வழக்கில் கர்நாடக மாநில முதல் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து கர்நாடக மாநில உள்துறை மந்திரி பரமேஷ்வரா கூறுகையில், மேலிடத்தில் இருந்து ஆளுநருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. தற்போது அது நிரூபணம் ஆகியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா கூறுகையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்க்க இது ஒரு பெரிய சதி. கர்நாடகத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. தவறு செய்யவில்லை என்பதால் ராஜினாமா செய்ய தேவையில்லை என்றார்.

இந்நிலையில், கர்நாடக கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரும் 19-ம் தேதி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அம்மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News