null
அரியானா, ஜம்மு காஷ்மீர் மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை: முன்னணி நிலவரம்... லைவ் அப்டேட்ஸ்
- அரியானா மாநிலத்தில் மெஜாரிட்டிக்கு 46 இடங்கள் தேவை.
- ஜம்மு-காஷ்மீரில் துணைநிலை ஆளுநர் ஐந்து நியமன எம்.எல்.ஏ.-க்களை நியமிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 26 தொகுதிகளுக்கும், 3-வது கட்டமாக 40 தொகுதிகளுக்கும் வாக்கப்பதிவு நடைபெற்றது.
அரியானாவில் 90 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீர் தேர்தலில் தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தேசிய மாநாடு கட்சி 42 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 6 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. 29 இடங்களிலும், பி.டி.பி. கட்சி 3 இடங்களிலும், பிற கட்சிகள் மூன்று தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் ஏழு தொகுதிகளிலும் வெற்றி.
அரியானா முதல்வர் நயப் சிங் சைனி வீட்டின் வெளியே பா.ஜ.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியானாவில் மூன்றாவது முறையாக பா.ஜ.க. ஆட்சியமைக்க உள்ளதை அடுத்து ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் ஷர்மா ஜிலேபி செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஜம்மு காஷ்மீரில் முதல் முறையாக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி வேட்பாளர் மெஹ்ராஜ் மாலிக்-க்கு வீடியோ கால் மூலம் வாழ்த்து தெரிவித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.
ஜம்மு காஷ்மீர் தேர்தலில் தேசிய மாநாடு கட்சி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியானா மாநிலத்தின் கைத்தல் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ஆதித்யா சுர்ஜேவாலா ரோடுஷா நடத்தினார்.
ஜம்மு காஷ்மீர் டோடா தொகுதியில் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கிறது. ஹரியானாவில் ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை.
அரியானாவில் பா.ஜ.க. முன்னிலையில் இருக்கும் நிலையில் பா.ஜ.க. தலைவர் மோகன் லால் படோலி "அரியானாவில் 2047 வரை பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும். அரியானா விக்சித் மாநிலமாகும். பா.ஜ.க.வின் வளர்ச்சிப் பணிகளில் நாட்டு மக்கள் திருப்தி அடைந்துள்ளனர். முழு மெஜாரிட்டியுடன் பா.ஜ.க. அரசு அரியானாவில் அமையப் போகிறது, 2-வது முறையாக நயாப் சிங் சைனி முதல்வராக பதவி ஏற்க உள்ளார்" என்றார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் வேட்பாளர் அனிருத் சவுத்ரி 9472 வாக்குகள் பின் தங்கியுள்ளார்.
அரியானா ஜூலானா தொகுதியில் வினேஷ் போகத் 63305 பெற்று 5909 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.