இந்தியா

வீட்டில் கஞ்சா பயிரிட்ட தம்பதி.. பேஸ்புக் பதிவால் போலீசில் சிக்கினர்

Published On 2024-11-10 12:45 GMT   |   Update On 2024-11-10 12:45 GMT
  • கஞ்சா செடியை வளர்த்த சிக்கிமை சேர்ந்த சாகர் - ஊர்மிளா தம்பதி கைது
  • தான் வளர்த்த செடிகளின் புகைப்படத்தை ஊர்மிளா பேஸ்புக்கில் பதிவிட்டதால் போலீசில் சிக்கினார்

கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் கஞ்சா செடியை வளர்த்த சாகர் - ஊர்மிளா தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த சாகர் குருங் (37) மற்றும் அவரது மனைவி ஊர்மிளா குமாரி (38) ஆகியோர் பெங்களூரு நகரில் பாஸ்ட்புட் கடையை நடத்தி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஊர்மிளா குமாரி, தனது பேஸ்புக் பக்கத்தில் அடிக்கடி வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வந்துள்ளார். அவ்வகையில் தனது வீட்டின் பால்கனியில் உள்ள பூந்தொட்டிகளில் வளரும் விதவிதமான செடிகளின் வீடியோ மற்றும் படங்களை பேஸ்புக்கில் அவர் வெளியிட்டார்.

ஊர்மிளா பதிவிட்ட 17 பூந்தொட்டிகளில் 2 தொட்டிகளில் கஞ்சா பயிரிட்டிருந்தார். ஊர்மிளாவை பேஸ்புக்கில் பின்தொடர்பவர்கள் அப்புகைப்படத்தில் கஞ்சா செடி இருப்பதை கண்டறிந்து போலீசில் புகாரளித்துள்ளனர்.

இதனையடுத்து போலீசார் சாகர் மற்றும் ஊர்மிளாவை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 54 கிராம் எடையுள்ள கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், "அதிக பணம் சம்பாதிப்பதற்காக கஞ்சா பயிரிட்டோம் என்று தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் இந்த தம்பதியை போலீசார் ஜாமினில் விடுவித்தனர்.

Tags:    

Similar News