இந்தியா (National)

சமந்தா விவாகரத்து குறித்த பதிவை நீக்க அமைச்சர் கோண்டா சுரேகாவிற்கு நீதிமன்றம் உத்தரவு

Published On 2024-10-25 08:41 GMT   |   Update On 2024-10-25 08:41 GMT
  • கே.டி.ராமாராவ் விஷயத்தில் நான் பின்வாங்க மாட்டேன்.
  • அமைச்சர் கோண்டா சுரேகா மன்னிப்பு கேட்டிருந்த நிலையில் சர்ச்சை பதிவை உடனடியாக நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தெலுங்கானா அறநிலையத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் கோண்டா சுரேகா, நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா விவாகரத்து செய்து பிரிந்ததற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராமாராவ் தான் காரணம் என குற்றம்சாட்டி இருந்தார்.

இந்த விவகாரம் கடும் சர்ச்சையாக மாறிய நிலையில், அமைச்சர் கோண்டா சுரேகா,

கே.டி.ராமாராவ் என்னைப் பற்றி ஆத்திரமூட்டும் கருத்துகளை தனக்கு ஆதரவான சமூக வலைதளத்தில் பரப்பி பேசி வருகிறார். இதனால் உணர்ச்சிவசப்பட்டு, கே.டி.ராமாராவை விமர்சிக்கும்போது தற்செயலாக ஒரு குடும்பத்தை குறிப்பிட்டு பேசிவிட்டேன். எனக்கு யார் மீதும் தனிப்பட்ட வெறுப்பு இல்லை. நான் பேசியதில் வேறொருவரை காயப்படுத்தியதை அறிந்தே நான் நிபந்தனையின்றி கருத்துகளை வாபஸ் பெற்று மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் கே.டி.ராமாராவ் விஷயத்தில் நான் பின்வாங்க மாட்டேன். அவர் செய்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இதையடுத்து நாக சைதன்யாவின் தந்தையான நடிகர் நாகார்ஜூனா, தனது குடும்ப உறுப்பினர்களின் கவுரவம் மற்றும் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் அவதூறான கருத்துகளை தெரிவித்ததாக, மாநில அமைச்சர் கோண்டா சுரேகா மீது நாம்பள்ளி நீதிமன்றத்தில் ரூ.100 கோடி கேட்டு கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், நாக சைதன்யா-சமந்தா விவாகரத்து குறித்து அமைச்சர் சுரேகா வெளியிட்ட பதிவை நீக்க உத்தரவிட்டது.

தனது பதிவுக்கு அமைச்சர் கோண்டா சுரேகா மன்னிப்பு கேட்டிருந்த நிலையில் சர்ச்சை பதிவை உடனடியாக நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News