இந்தியா

பக்தர்கள் மீது பசுமாடுகளை ஓடவிட்டு நேர்த்திக்கடன்- உத்தரபிரதேசத்தில் வினோதம்

Published On 2024-11-03 01:57 GMT   |   Update On 2024-11-03 01:57 GMT
  • பிதாத்வாத் கிராமத்தில் கோவர்தன் பூஜை விமரிசையாக நடந்தது.
  • இளைஞர்கள் பலர் தரையில் படுத்திருக்க அவர்கள் மீது பசு மாடுகள் ஏறி ஓடின.

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் உஜ்ஜைனி மாவட்டத்தில் உள்ளது பிதாத்வாத் கிராமம். இங்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் கோவர்தன் பூஜை நடத்துவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

கடவுள் கிருஷ்ணருக்காக நடத்தப்படும் இந்த பூஜையில் மக்கள் தரையில் படுத்து, தங்கள் மீது பசு மாடுகளை ஓடவிட்டு நேர்த்தி கடன் செலுத்துவது பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று முன்தினம் பிதாத்வாத் கிராமத்தில் கோவர்தன் பூஜை விமரிசையாக நடந்தது. அப்போது பக்தர்கள் பாரம்பரிய முறைப்படி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அதன்படி இளைஞர்கள் பலர் தரையில் படுத்திருக்க அவர்கள் மீது பசு மாடுகள் ஏறி ஓடின. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

Tags:    

Similar News