இந்தியா (National)

பாலியல் புகார் கூறிய நடிகை மீது வழக்குப்பதிவு

Published On 2024-10-05 09:06 GMT   |   Update On 2024-10-05 09:06 GMT
  • குழுவினர் பாதிக்கப்பட்ட நடிகைகளிடம் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றனர்.
  • குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டுகளில் முன்ஜாமீன் பெற்றதால், அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

திருவனந்தபுரம்:

மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களை ஹேமா கமிட்டி அறிக்கை அம்பலப்படுத்தியது. அதன டிப்படையில் சம்பந்தப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு அமைத்தது.

அந்த குழுவினர் பாதிக்கப்பட்ட நடிகைகளிடம் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றனர். அதனடிப்படையில் மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் சிலர் மீது பாலியல் வழக்கு பதியப்பட்டது. அதன்பேரில் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

இருந்தபோதிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டுகளில் முன்ஜாமீன் பெற்றதால், அவர்கள் விடுவிக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வலுவான ஆதாரங்களை சேகரிக்கும் நடவடிக்கையில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் நடிகரும், இயக்குனருமான பாலச்சந்திர மேனனின் மீது பாலியல் புகார் அளித்தநடிகை மீது கேரள சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். சமூக வலைதளங்களில் தன்னை பற்றி நடிகை அவதூறாக பேசியதாக போலீஸ் டி.ஜி.பி.யிடம் பாலச்சந்திர மேனன் புகார் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் நடிகையின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நடிகை பாலச்சந்திரமேனன், நடிகர்கள் ஜெயசூர்யா, இடைவேளை பாபு உள்ளிட்ட 7 பேர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News