இந்தியா

பீகார் எம்.பி.க்கு தாதா கும்பல் மீண்டும் கொலை மிரட்டல்

Published On 2024-11-09 07:17 GMT   |   Update On 2024-11-09 07:17 GMT
  • எம்.பி. பப்பு யாதவ், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை 24 மணி நேரத்தில் நான் அழித்து விடுவேன் என பேசி இருந்தார்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாட்னா:

மராட்டிய மாநிலம் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் பாபா சித்திக்கை தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டாளிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதியை சேர்ந்த எம்.பி. பப்பு யாதவ், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை 24 மணி நேரத்தில் நான் அழித்து விடுவேன் என பேசி இருந்தார். இதைத்தொடர்ந்து பப்பு யாதவின் செல்போனுக்கு கொலை மிரட்டல் வந்தது. அதில் பேசிய ஒருவர் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு எதிராக இதுபோன்று பேசுவதை தவிர்க்காவிட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி இருந்தார்.

அதன் பிறகு அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் பப்பு யாதவ் எம்.பி.க்கு மீண்டும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலிடம் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. எம்.பி.யின் தனிப்பட்ட செயலாளர் முகமது சாதிக் ஆலமுக்கு வாட்ஸ்-அப்பில் ஒரு மிரட்டல் வந்துள்ளது. அதில், பப்பு யாதவை கொலை செய்ய 6 நபர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பூர்ணியா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News