இந்தியா

தலித் சிறுமி பலாத்காரம்.. புகாரை வாபஸ் வாங்கும்வரை தலித் குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கிய அவலம்

Published On 2024-09-14 16:04 GMT   |   Update On 2024-09-14 16:04 GMT
  • தலித் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆதிக்க சாதி இளைஞனை காப்பாற்ற 50 தலித் குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது.
  • கடைகளில் பொருட்கள் வாங்கவும், கோவில்களில் வழிபாடு செய்யவும், பொது இடங்களைப் பயன்படுத்தவும் ஆதிக்க சாதியினர் தடை விதித்துள்ளனர்.

கர்நாடகாவில் தலித் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆதிக்க சாதி இளைஞனை காப்பாற்ற 50 தலித் குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது. பெங்களூருக்கு 500 கிலோமீட்டர் தூரத்தில் வடக்கு கர்நாடகாவில் உள்ள யாத்கிர் மாவட்டத்தில் அமைத்துள்ள பாப்பரகா [Bapparaga] கிராமத்தில் தலித் குடும்பங்களைச் சேர்ந்தவர்கவர்கள் கடைகளில் பொருட்கள் வாங்கவும், கோவில்களில் வழிபாடு செய்யவும், பொது இடங்களைப் பயன்படுத்தவும் ஆதிக்க சாதியினர் தடை விதித்துள்ளனர்.

இந்த கிராமத்தில் வசித்து வரும் ஆதிக்க சாதியை சேர்ந்த 23 வயது இளைஞன் தலித் சமூகத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனால் அந்த சிறுமி 5 மாத கர்ப்பமான நிலையில் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி சிறுமியின் பெற்றோர் அந்த இளைஞன் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனபடி போலீசார் போக்ஸோ வழக்கு பதிந்துள்ளனர்.

 

இந்நிலையில் அந்த புகாரை வாபஸ் வாங்குமாறு அந்த கிராமத்தில் உள்ள ஆதிக்க சாதியினரால் சிறுமியின் குடும்பத்துக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் சிறுமியின் குடும்பம் விடாப்பிடியாக மறுத்த நிலையில் புகாரை வாபஸ் வாங்கும்வரை அந்த கிராமத்தில் வசிக்கும் 50 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளன. இந்த மனிதாபிமானமற்ற செயலை கைவிடுமாறு யாத்கிர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதிக்க சாதியினரை வலியுறுத்தி வருகிறார். 

 

Tags:    

Similar News