இந்தியா

திருப்பதி விமான நிலையத்தில் தரிசன டிக்கெட் கவுண்டர் மாற்றம்

Published On 2023-12-16 04:53 GMT   |   Update On 2023-12-16 04:53 GMT
  • விமான நிலையத்துக்குப் பதிலாக திருமலை கோகுலம் தங்கும் விடுதியில் டிக்கெட் வழங்கப்படுகிறது.
  • வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 23-ந் தேதி முதல் 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி வரை பரமபதவாசல் திறக்கப்படுகிறது.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலை யானை தரிசிக்க வரும் வெளிநாட்டு பக்தர்களின் வசதிக்காக திருப்பதி விமான நிலையத்தில் தினமும் 100 நேரடி (ஆப்லைன்) தரிசன ஸ்ரீவாணி டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வழங்கி வருகிறது.

ஆனால், ஸ்ரீவாணி டிக்கெட்டுகளுக்கு விமான நிலையத்தில் அனுமதி வழங்கப்படாததால், இன்று முதல் விமான நிலையத்துக்குப் பதிலாக திருமலை கோகுலம் தங்கும் விடுதியில் டிக்கெட் வழங்கப்படுகிறது.

ஸ்ரீவாணி தரிசனம் நேரடி(ஆப்லைன்)தரிசன டிக்கெட்டுகளுக்கு வழக்கம் போல் அனுமதி சீட்டு சமர்ப்பித்த பக்தர்களுக்கு தினமும் 100 டிக்கெட்டுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வருகிற 23-ந் தேதி முதல் 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி வரை பரமபதவாசல் திறக்கப்படுகிறது.

இதையொட்டி வருகிற 19-ந் தேதி கோவில் சுத்தம் செய்யும் பணி நடைபெற உள்ளது. எனவே அன்று தேவஸ்தானம் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தை ரத்து செய்துள்ளது.

வருகிற 18-ந் தேதி முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News