இந்தியா

கெஜ்ரிவால் கைது கண்டித்து நாடு தழுவிய போராட்டம்- ஆம் ஆத்மி அழைப்பு

Published On 2024-03-22 04:18 GMT   |   Update On 2024-03-22 04:18 GMT
  • ராகுல் காந்தி இன்று கெஜ்ரிவாலின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளதாக தகவல்.
  • கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டபோதிலும் முதலமைச்சராக தொடர்வார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்க இயக்குனரகம் கைது செய்ததை அடுத்து, ஆம் ஆத்மி கட்சி இன்று பாஜக அலுவலகங்களுக்கு வெளியே நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

ரெய்டுகளுக்கு எதிரான கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை அவசர விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் நிராகரித்த நிலையில், இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இருக்கிறது. அப்போது, அமலாக்கத்துறை கெஜ்ரிவாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்.

மக்களவைத் தேர்தல் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், டெல்லி முதல்வர் மீதான கைது நடவடிக்கை கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

கைது நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனத்தை எழுப்பி வருகின்றனர்.

இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கெஜ்ரிவாலின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டபோதிலும் முதலமைச்சராக தொடர்வார் என சபாநாயகர் தெரிவித்துள்ளா்.

இந்நிலையில், கெஜ்ரிவால் மீதான கைது நடவடிக்கையை தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆம் ஆத்மி அழைப்பு விடுத்துள்ளது. மேலும், டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்துக்கு வெளியே இன்று போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News