இந்தியா
null

சீக்கியர்களை தவறாகக் காட்டினால்.. 'எமர்ஜென்சி' படம் ரிலீஸை ஒட்டி கங்கனா ரனாவத்துக்கு கொலை மிரட்டல்

Published On 2024-08-27 04:57 GMT   |   Update On 2024-08-27 04:59 GMT
  • கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள எமர்ஜென்சி படம் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது
  • உங்களை எங்காவது பார்த்தால், எங்களுடைய இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ சகோதரர்களுடன் உங்களைக் காலணியால் வரவேற்போம்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975 ஜூன் 21 ஆம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடமானது 1977 மார்ச் 21 ஆம் தேதி வரை நீடித்தது. இந்த காலகட்டத்தில் நடந்த சம்பவங்களை மையாக வைத்து பாஜக எம்.பி கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள படம் எமர்ஜென்சி. இதில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் கங்கனா நடித்துள்ளார். வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் தனக்கு சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாக கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் கங்கனா. அந்த வீடியோவில் உள்ளவர்கள் பேசியதாவது, இந்த படத்தை நீங்கள் ரிலீஸ் செய்தால் சர்தார்கள் உங்களை செருப்பால் அடிப்பார்கள். நீங்கள் ஏற்கெனவே அறை வாங்கியிருக்கிறீர்கள். மகாராஷ்டிராவில் உங்களை எங்காவது பார்த்தால், எங்களுடைய இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ சகோதரர்களுடன் உங்களைக் காலணியால் வரவேற்போம்.

வரலாற்றை யாராலும் மாற்ற முடியாது. படத்தில் சீக்கியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்திருந்தால், யாரைப் பற்றி நீங்கள் படம் எடுக்கிறீர்களோ [இந்திரா காந்தி] , அவருக்கு என்ன நடந்தது என்பதை மனதில் கொள்ளுங்கள். எங்களை நோக்கிக் காட்டப்படும் விரல்களை எப்படி உடைக்க வேண்டும் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். தலைகளையும் தியாகம் செய்ய முடிந்த எங்களால், அதை எடுக்கவும் முடியும்" என்று பேசியுள்ளனர். இதற்கிடையே, புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்த விவசாயிகளின் போராட்டத்தை வங்கதேச வன்முறையோடு ஒப்பிட்டு கங்கனா பேசியது சர்ச்சையாகி வருகிறது. 

Tags:    

Similar News