மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம்ஆத்மி கட்சியை சேர்க்க முடிவு
- ஆம்ஆத்மி எம்.பி. சஞ்சய்சிங் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
- அந்த கட்சியை ஏன் குற்றவாளியாக குறிப்பிடவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கடந்த 2021-22-ம் நிதியாண்டில் உருவாக்கிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கில் அம்மாநில துணை முதல்-மந்திரியாக இருந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.
நேற்று இவ்வழக்கு தொடர்பாக ஆம்ஆத்மி எம்.பி. சஞ்சய்சிங் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் மதுபான கொளகை முறைகேடு வழக்கில் ஆம்ஆத்மி கட்சி பெயரை சேர்க்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் மணிஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மதுபான கொள்கையால் ஆம்ஆத்மி கட்சி பலன் அடைந்ததாக அமலாக்கத்துறை வாதிட்டது. அந்த கட்சியை ஏன் குற்றவாளியாக குறிப்பிடவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதைடுத்து டெல்லி மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி குற்றச்சாட்டின் கீழ் ஆம்ஆத்மி கட்சியை குற்றம் சாட்ட முடியுமா? என்பது குறித்து சட்ட நிபுணர்களின் கருத்தை அமலாக்கத்துறை நாடியுள்ளது.